2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா


2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா
x
தினத்தந்தி 4 Sep 2018 10:15 PM GMT (Updated: 4 Sep 2018 8:40 PM GMT)

2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை மாதந்தோறும் மெட்ரோ ரெயிலில் இலவசமாக அழைத்து சென்று மெட்ரோ ரெயில் குறித்த விழிப்புணர்வை அளித்து வருகிறது.

குறிப்பாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ். வரையிலும் மாணவ-மாணவிகள் கல்விச்சுற்றுலாவாக அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 2 ஆயிரம் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரெயில் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story