வீரபாண்டி அருகே ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை


வீரபாண்டி அருகே ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Sept 2018 3:45 AM IST (Updated: 5 Sept 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே, தனியார் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மகன்கள், மகள்கள் கவனிக்காததால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆட்டையாம்பட்டி,

தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 73). இவர் கடந்த 3 மாத காலமாக வீரபாண்டி அருகே சீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருந்த போதிலும் யாரும் உடன் இருந்து கவனிக்கவில்லை என்றும், இதனால் அவர் விரக்தியடைந்து, இந்த விபரீத முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்டுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Next Story