காவிரி தண்ணீரை கடைமடை பகுதி வரை கொண்டு செல்லாததை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட பா.ம.க. சார்பில், ஜங்ஷன் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட பா.ம.க. சார்பில், ஜங்ஷன் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். காவிரி தண்ணீரை திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 கிளை வாய்க்கால்களுக்கும், கடைமடை பகுதிகளுக்கும், ஏரி, குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் உமாநாத், மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story