பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Sept 2018 3:39 AM IST (Updated: 5 Sept 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்துப்பட்டார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர்கள் இளங்கோவன்(வயது24), கார்த்திக், குமரேசன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து, 17 வயதான பிளஸ்–2 படித்து வந்த மாணவியை கடந்த 31–ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

இந்நிலையில் போலீசார், இளங்கோவனை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து அவர் அந்த மாணவியை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் மாணவியை கடத்தியதாக இளங்கோவனை போக்சோ சட்டத்தின்(பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) கீழ் போலீசார் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு ரிசனா பர்வீன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் சிறை காவலில் வைக்கவும், சிறுமியை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கும்படியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவன் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், குமரேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story