மாவட்ட செய்திகள்

உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி + "||" + Reduce obesity Eat the tablet Graduate kills

உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி

உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி
நாக்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துர்கா நகரை சேர்ந்தவர் பரிதோஷ் சுரேஷ் (வயது 27). இவர் பயோ-டெக்னாலஜி பிரிவில் பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக தேர்வு எழுத தயாராகி வந்தார்.
மும்பை,

பரிதோஷ் சுரேஷ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி திடீரென மாயமானார். பின்னர் 4 நாட்களுக்கு பிறகு பேசா அருகே உள்ள கோகலி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மற்றும் தடய அறிவியல் சோதனை மூலம் அவர் கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொள்ளவில்ைல என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவரது மர்மச்சாவில் துப்பு துலங்கி உள்ளது.

பரிேதாஷ் சுரேஷ் தனது உடல் எடை அதிகரித்ததை நினைத்து கவலை கொண்டுள்ளார். இதனால் செல்போன் மூலம் கூகுளில் உடற்பருமனை குறைப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்களை திரட்டி உள்ளார்.

அப்போது கூகுளில் கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட மாத்திரையை சுயமாக வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அந்த மாத்திரையை அதிகளவு அவர் தின்ற காரணத்தினால் சம்பவத்தன்று வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு மயங்கி விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலி
திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலியானார்.
2. திருமருகல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் பலி
திருமருகல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
3. மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பட்டு நெசவு தொழிலாளி சாவு
மாமண்டூர் தர்மாபுரம் குளங்கரை தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 35), பட்டுநெசவு தொழிலாளி மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
4. விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலி; மற்ற நோயாளிகளிடம் இருந்து பரவியதாக உறவினர்கள் புகார்
விபத்து காயத்துக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் 1½ மாதமாக சிகிச்சையில் இருந்த 6–ம் வகுப்பு மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தான். மற்ற நோயாளிகளிடம் இருந்துதான் அவனுக்கு பன்றி காய்ச்சல் பரவியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
5. ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
ஆட்டோ மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.