மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் + "||" + From Chennai Rounded with modern boxes Potikai Express

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை,

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலை நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரள மாநில மக்களும் அதிகம் நம்பி உள்ளனர். செங்கோட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமே தினமும் சென்னைக்கு இயக்கப்படுவதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் இந்த ரெயிலுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமம். முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படும். 108 பேர் பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் 200 பேர் பயணம் செய்யும் அவலநிலையும் உள்ளது.

இந்த நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் சிறப்பு அம்சங்கள் கொண்ட எல்.எச்.பி. நவீன பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. 23 நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. நேற்று காலை இந்த ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் ஏராளமான பயணிகள் வந்து இறங்கினார்கள்.

வரவேற்பு பெறும்

இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், “ பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன வசதிகளுடன் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணத்தின் போது தண்டவாளத்தில் காணப்படும் அதிர்வுகள் மிக குறைவாகவே இருப்பதால் சுகமான பயணத்தை உணர முடிந்தது. பெட்டிகளில் விசாலமான ஜன்னல்கள், செல்போன் சார்ஜர் போடும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. நீண்ட தூரம் இயக்கப்படும் ரெயில்களில் மட்டுமே இந்த மாதிரியான நவீன பெட்டிகள் இணைக்கப்படும். ஆனால் தற்போது, தமிழகத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். இந்த ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரெயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்“ என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காலிண்டி விரைவு ரெயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு
காலிண்டி விரைவு ரெயிலில் இன்று இரவு சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
2. ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் கடைகள் வைக்க அனுமதி
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன.
3. விருதுநகர் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? அதிகாரிகள் பாராமுகம்
விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முன்பாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
4. திருச்சி–காரைக்கால் இடையே மின்சார ரெயில் சேவை, அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
திருச்சி–காரைக்கால் இடையே அடுத்த மாத இறுதியில் மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வருகிறது. இதற்காக தஞ்சை பகுதியில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
5. சென்னை சென்டிரல்–நாகர்கோவிலுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம் இன்று முன்பதிவு தொடங்குகிறது
சென்னை சென்டிரல்–நாகர்கோவிலுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...