நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்டினி போராட்டம்


நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் பட்டினி போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2018 11:00 PM GMT (Updated: 5 Sep 2018 2:45 PM GMT)

உடனடியாக ஊதியம் வழங்க கோரி தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் நாகர்கோவிலில் நேற்று பட்டினி போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமனம் பெற்று கடந்த சில ஆண்டுகளாக ஊதியம் இன்றி பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட தமிழக அரசையும், பள்ளி கல்வித்துறையையும் வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பட்டினி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சேவியர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க பொதுச்செயலாளர் கனகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

 தோழமை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வாழ்த்தி பேசினர். முன்னாள் பொதுச்செயலாளர் இருதயதாசன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். சங்க மாவட்ட பொருளாளர் அஜின் நன்றி கூறினார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பட்டினி போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் வினோத், சிவஸ்ரீ ரமேஷ், ஆரோக்கிய டொமினிக் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story