ஊத்துக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்


ஊத்துக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2018 3:45 AM IST (Updated: 6 Sept 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஜமாபந்தி படி, இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு, கிராம உதவியாளர்களுக்கு பழைய முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராம ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு செல்ல வில்லை.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்படி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்த உள்ளதாக சங்க ஊத்துக்கோட்டை வட்ட தலைவர் அருள் தெரிவித்தார்.


Next Story