அரியலூர்–பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்
அரியலூர், உடையார்பாளையம் ஆகிய தாலுகாவில் 2 கிராமத்திலும், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய தாலுகாவில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம்கள் நாளை அந்தந்த தாலுகாவின் தாசில்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய தாலுகாவில் 2 கிராமத்திலும், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய தாலுகாவில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம்கள் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தந்த தாலுகாவின் தாசில்தார்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:– அரியலூர் தாலுகாவில் அமீனாபாத், அன்னிமங்கலம் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் தாலுகாவில் பருக்கல் (மேற்கு), ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் இரும்புலிக்குறிச்சி கிராமத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் நடைபெறுகிறது.
இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் அரணாரை (வடக்கு), வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறை (மேற்கு), குன்னம் தாலுகாவில் அத்தியூர் (வடக்கு) மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் து.களத்தூர் ஆகிய 4 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறலாம்.
இந்த தகவலை அரியலூர்–பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.