இழுபறியில் உள்ள நகர-புரசபைகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்


இழுபறியில் உள்ள நகர-புரசபைகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்
x
தினத்தந்தி 6 Sept 2018 4:15 AM IST (Updated: 6 Sept 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

இழுபறியில் உள்ள நகர, புரசபைகளை கைப் பற்றும் வகையில் ‘ஆப ரேசன் தாமரை’ மூலம் சுயேச்சைகளை இழுக்க பா.ஜனதா முயற்சியில் இறங்கியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குகள் கடந்த 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இந்்த தேர்தலில் துமகூரு, மைசூரு மாநக ராட்சியில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் துமகூரு, மைசூரு மாநக ராட்சியை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கைப்பற்ற தீர்மானி த்துள்ளது. அதுபோல, 25-க்கும் மேற் பட்ட நகர, புரசபையில் இழுபறி நிலவுகிறது. அவற்றில் 13 நகர, புரசபைகளில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் 12 நகர, புரசபைகளில பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி முன்னணியில் இருக்கிறது. மேலும் அங்கு சுயேச்சைகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சுயேச்சைகள் அதிகம் வெற்றி பெற்றுள்ள நகர, புரசபைகளை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கைப்பற்றி விடக்கூடாது என்றும், அவற்றை பா.ஜனதா கைப்பற்ற வேண்டும் என்றும், பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சுயேச்சைகள் ஆதரவுடன் 12 நகர, புரசபைகளை கைப்பற்ற பா.ஜனதா தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆபரேசன் தாமரை மூலமாக சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், பிற சிறிய கட்சிகளை சேர்ந்தவர்களை பா.ஜனதா பக்கம் இழுக்க கர்நாடக பா.ஜனதா மேலிட தலைவர்கள் முழு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டும் அல்லாமல் சுயேச்ைசகள், பிற கட்சிகளை சேர்ந்தவர்களை இழுக்க மூத்த தலைவர்கள் ஸ்ரீராமுலு, பசவராஜ் பொம்மை, கட்டா சுப்பிரமணியநாயுடு, முருகேஷ் நிராணி, உமேஷ் கட்டிக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருப் பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சுயேச்சைகள், பிற கட்சிகளை சேர்ந்தவர்களை ஆபரேசன் தாமரை மூலமாக பா.ஜனதா பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், 12 நகர, புரசபைகளை கைப்பற்ற தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story