ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்


ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sept 2018 4:15 AM IST (Updated: 6 Sept 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் நடந்த விழாவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் உதவிகள், வேளாண்மை கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஏகாம்பரம் வரவேற்றார். மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் சூரியநாராயணன், கோபிநாதன், நகர வங்கி தலைவர் சபேசன், முன்னாள் தலைவர் நாகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு மொத்தம் 1,274 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பிலான கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து நடமாடும் ஏ.டி.எம். மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் டில்லர், டீசல் பம்பு செட், நடவு எந்திரம் உள்ளிட்ட வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. விழாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முருகதாஸ், சதீஸ், சிவக்குமார், முத்து, கண்ணன், பழனிசாமி, ஜாகீர்உசேன், சேக்தாவூது, காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கங்காதேவி நன்றி கூறினார்.

Next Story