மாவட்ட செய்திகள்

காமசாஸ்திர சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் ஆய்வு + "||" + An assistant collector surveyed with a large bathing sculpture

காமசாஸ்திர சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் ஆய்வு

காமசாஸ்திர சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் ஆய்வு
தண்டராம்பட்டு அருகே காமசாஸ்திரத்தை விளக்கும் சிற்பங்கள் நிறைந்த குளத்தை உதவி கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அந்தக் குளம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.
தண்டராம்பட்டு,


திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டமாகும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பழமை வாய்ந்த கல்வெட்டுகள், அரிய வகை சிற்பங்கள், நடுகற்கள் போன்றவை அடிக்கடி கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் வேலூர் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக தானிப்பாடி அருகே சின்னியம்பேட்டை என்னும் இடத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் ஒரு குளம் உள்ளது. இந்தக் குளத்தின் கரையைச் சுற்றி காமசாஸ்திர சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப்பட்டுள்ளன. அந்தக் குளத்தைத் தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

அதேபோல் தண்டராம்பட்டு அருகே கீழ்ராவந்தவாடி என்ற கிராமத்தில் 45 சென்ட் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தை மக்கள் காமசூத்திரா குளம் என அழைக்கின்றனர். அந்தக் குளத்தைச் சுற்றிலும் படிக்கட்டுகளில் காம சாஸ்திரத்தைக் குறிக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அந்தக் குளம் வருவாய்த்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பராமரிக்கப்படாததால், படிக்கட்டுகள் உடைந்து, சிதலமடைந்து வருகின்றன. இந்த அரிய சிற்பங்கள் நிறைந்த குளம் தூர்ந்துபோய், சிற்பங்கள் சிதையும் நிலையில் உள்ளன. அந்தக் குளத்தைப் பராமரித்து, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கீழ்ராவந்தவாடியில் உள்ள காமசாஸ்திரத்தை விளக்கும் குளத்தைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அந்தக் குளம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும், வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். அந்த ஆய்வின்போது தாசில்தார் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் பலர் உடனிருந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் கைலாசநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்கச்சென்ற சிறுவர்கள் ஆற்றின் கரையில் கண்டெடுத்த 2 சாமி கற்சிலைகள் திருமானூர் கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
2. தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
தலைஞாயிறு பகுதியில் சம்பா சாகுபடியை நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
3. மக்கள்தான் சொல்ல வேண்டும்: இலவசங்கள் வேண்டாம் என்று நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் கூறக்கூடாது அமைச்சர் பேட்டி
இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர, காசுக்காக நடிப்பவர்களும், படத்தை தயாரிப்பவர்களும் சொல்லக்கூடாது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
4. புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
5. கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
மன்னார்குடி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.