அவதூறாக பேசிய நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


அவதூறாக பேசிய நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 4:48 PM GMT)

பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சினிமா நடிகர் விசு சமீபத்தில் காணொலியில் பேசும் போது என்னை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். எனவே என் பெயரை குறிப்பிட்டு பேசும் பகுதிகளை நீக்க வேண்டும் என்று முகநூல் வழியாக நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் என் கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து நடிகர் விசு மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். புகார் அளித்த பிறகும் விசு என்னை விமர்சித்து பேசியுள்ளார். என் மீது அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இப்படிப்பட்ட தொடர் பேச்சுகளால் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் பெரும் இடையூறுகளும், ஆபத்துகளும் எழுகின்றன. எனவே நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story