8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு


8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Sept 2018 3:00 AM IST (Updated: 6 Sept 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே 8–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த சீதாராமன் மகன் கார்த்தி (வயது 25) என்பவர், மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி அருகே உள்ள கரும்பு வயலுக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த மாணவியின் தாய் கார்த்திக் வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்? என கேட்டு தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர், மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story