மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near the vertical Husband and wife Sleeping suicide

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதா(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 7 வயதில் லோகிதா என்ற மகள் இருக்கிறாள். அவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சுரேசுக்கும், சுதாவுக்கும் முன்கோபம் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என தெரிகிறது. சுரேஷூக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ், குடிபோதையில் வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்த சுரேஷ், தனது மனைவி தூக்கில் தொங்கிய அதே கயிற்றின் மறுமுனையில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் அவர்களுடைய மகள், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

நேற்று காலை 9 மணி வரை சுதா வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் கதவை திறந்து வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி கைது
சேத்தியாத்தோப்பு அருகே மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர் காதல் திருமணம் செய்தவர்கள்
சென்னை திருவான்மியூரில், காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.
3. அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை பார்ப்பதில் சிக்கல் - விசா வழக்கில் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரணை
அமெரிக்காவில் ‘எச்-4’ விசா பிரச்சினையால், வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வேலை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் (ஜனவரி) விசாரணை நடைபெறுகிறது.
4. கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. பெற்றோர் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.