மாவட்ட செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி + "||" + The building worker who died on Railway Railway

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி

ரெயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி
குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கட்டிட தொழிலாளி இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை, 

குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை சுங்ககேட் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் நேற்று இறந்துகிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரெயில்வே போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் இதுகுறித்து விசாரித்த போது இறந்து கிடந்தவர் குளித்தலை கோட்டமேடு பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் அன்புச்செல்வன்(வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்துவந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூரில் இருந்து குளித்தலைக்கு வந்த இவர், தனது ஊருக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. துறையூர் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது மொபட் மோதியதில் தொழிலாளி படுகாயம்
துறையூர் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது மொபட் மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. மனைவியுடன் தகராறு: டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
3. அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார். இழப்பீடு கேட்டு உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. தீபாவளிக்கு ஊருக்கு வர மனைவி மறுத்ததால்: தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வர மனைவி மறுத்ததால் மனமுடைந்த தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. டிராக்டருக்காக நண்பனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
டிராக்டருக்காக நண்பனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.