கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 2 ஆண்டு சிறை : பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்தவர் சிவபிரசாத் சஜ்ஜான். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் சில இளம்பெண்களுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்கள், ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவபிரசாத் சஜ்ஜானை கைது செய்தனர். பின்னர் சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பெங்களூரு மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சிவபிரசாத் சஜ்ஜான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
இதனால், அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு சிறை தண்டனை கிடைத்திருப்பது கர்நாடகத்தில் இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story