காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பரமேஸ்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று காங்கிரஸ் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூருவில் பரமேஸ்வர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
இதில் கலந்துகொள்ளும்படி காங்கிரசை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சியை சுமூகமாக நடத்தி செல்வது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்வது, நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து செயல்படுவது, புதிய மேயரை தேர்ந்தெடுப்பது, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப் படுகிறது.

Related Tags :
Next Story