மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் + "||" + Due to maintenance work Today is the electric train Change in traffic

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் - தானே ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை வாராந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.


இதன் காரணமாக கல்யாணில் இருந்து வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.54 மணி முதல் மாலை 4.19 மணி வரை கல்யாண் - தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும். பின்னர் தானேயில் இருந்து விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும். இந்த ரெயில்கள் முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா, தாதர் மற்றும் பைகுல்லா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சி.எஸ்.எம்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.16 மணி முதல் பிற்பகல் 3.22 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

துறைமுக வழித்தடத்தில் குர்லா - வாஷி இடையே இருமார்க்கத்திலும் காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெல் செல்லும் ரெயில்கள் காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரையும், மேற்கண்ட இடங்களில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்கள் காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் - மும்பை சென்டிரல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தின் இருமார்க்கத்திலும் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக ஸ்லோ ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவல்கள் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...