பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம்
பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுவதாக மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு தூய்மை இந்தியா திட்டத்துக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதன்படி நகரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்றும் நடவடிக்கையாக பொது இடத்தில் குப்பைகளை வீசுதல், எச்சில் உமிழ்தல், திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் ஆகியவற்றை தடுக்க மராட்டிய அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் மராட்டிய அரசு மாநிலத்தில் உள்ள 27 மாநகராட்சி மற்றும் 236 நகராட்சிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
அந்த உத்தரவில் பொது இடத்தில் எச்சில் உமிழ்பவர்களுக்கு ரூ.150, குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.180, திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு ரூ.200, மலம் கழிப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும்படி கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story