பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் பேர்வெல் ரிக் லாரிகள் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் நலச்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
மதுரை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பேர்வெல் ரிக் லாரிகள் உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் நலச்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மாநகராட்சி வாகனங்கள் கட்டண காப்பகத்தில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. போராட்டத்திற்கு மதுரை மாநகர தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார், செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story