அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்

தியாகதுருகம் அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 42), ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பழையசிறுவங்கூரை சேர்ந்த தயாளரெட்டி மகன் தண்டபாணி என்பவர் அருணகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு, ராமராஜபுரம் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக பேசினார்.
பின்னர் சம்பவத்தன்று தண்டபாணி, பள்ளிப்பட்டை சேர்ந்த வேலாயுதத்துடன் சேர்ந்து கொண்டு ராமராஜபுரம் கால்வாயை ஏன் தூர்வாரவில்லை என செல்போனில் கேட்டு ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தண்டபாணி, வேலாயுதம் ஆகிய 2 பேர் மீது தியாகதுருகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story