மாவட்ட செய்திகள்

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து + "||" + In vettavalam Furore: A sudden fire accident on state bus

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து
வேட்டவலத்தில் அரசு பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வேட்டவலம்,

வேட்டவலத்தில் அரசு பஸ் ஒன்று கடைவீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பழைய போலீஸ் நிலையம் அருகில் வந்தபோது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. உடனே கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் டிரைவரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.


இந்த தீயினால் பஸ்சில் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அவசர அவசரமாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தப்படி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அருகில் இருந்த கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் டீசல் டேங்க் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.

இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பஸ்சில் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு: நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த கஜா புயல்
காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூடையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் கைது
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4. இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த வழக்கு; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கழுத்தை நெரித்து கொலை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே கண்மாய் பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் போலீசில் சரணடைந்தார்.
5. சிவகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் காரில் கடத்தல்; 6 பேர் கைது
சிவகிரி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.