மாவட்ட செய்திகள்

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள் + "||" + Special Officer job in the Bank

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்
பொதுத் துறை வங்கிகளில் ஒன்று மகாராஷ்டிரா வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணி மற்றும் சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு 59 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு மட்டும் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

31-7-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.ஏ./ஐ.சி.டபுள்யு.ஏ. படித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.


இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 23-9-2018-ந் தேதியாகும். நகல் விண்ணப்பம் 3-10-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதேபோல சிறப்பு அதிகாரி பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 23 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ, சி.எப்.ஏ., பொருளாதாரம் முதுநிலைப்படிப்பு, பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு பணி உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துவிட்டு 23-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
2. வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு : 1599 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1599 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி
கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
4. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை : 400 பணியிடங்கள்
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர், ஜூனியர் கன்சல்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
5. முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவ அகாடமிகளில் 417 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-