கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி


கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
x
தினத்தந்தி 11 Sept 2018 11:11 AM IST (Updated: 11 Sept 2018 11:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, நேவல் டாக்யார்டு கப்பல் பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 318 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அப்ரண்டிஸ் பயிற்சிப்  பணிக்கு 1-4-1999-ந் தேதி மற்றும் 31-3-2006-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.bhartiseva.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story