ராணுவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை


ராணுவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை
x
தினத்தந்தி 11 Sept 2018 11:20 AM IST (Updated: 11 Sept 2018 11:20 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஒ. எனப்படுகிறது.

இதன் கீழ் செயல்படும் எரிவாயு காற்றாலை ஆராய்ச்சி மையத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. பிரிவில் அப்ரண்டிஸ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் 90 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 30 பேரும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் 30 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் 14-9-2018-ந் தேதியில் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 30 வயதுக்கு உள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு கள் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

பட்டதாரி என்ஜினீயர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 14-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் பல்வேறு தினங்களில் நடக்கிறது. செப்டம்பர் 25-ந் தேதி ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும், 26-ந் தேதி டிப்ளமோ என்ஜினீயர்களுக்கும், அக்டோபர் 8-ந் தேதி பட்டதாரிகளுக்கும் தேர்வுகள் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://rac.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story