பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அரசியல் கட்சியினர் அஞ்சலி
பரமக்குடியில் நேற்று நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 61-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காலை 7 மணி முதல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் அவர் பிறந்த ஊரான செல்லூர் கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பஞ்சாப் மாநிலம் அகில இந்திய ஆதிதரம் மிஷன் என்ற அமைப்பின் சார்பில் அதன் தேசிய தலைவர் சந்த் சத்விந்தர் ஹிரா தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் அதன் தலைவர் பாம்பூர் சண்முகம் தலைமையில் செயலாளர் கார்மேகம், பொருளாளர் சங்கரலிங்கம், துணை தலைவர்கள் முத்துக்கருங்கு, ராஜேந்திரன், துணை செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பில் அவரது மகள் பிரபாராணி, பேரன்கள் இளவரசன், சக்கரவர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி அம்பேத்கர் வக்கீல்கள் சார்பில் கந்தசாமி, முத்துக்கண்ணன், பூமிநாதன், பசுமலை உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் குணா தலைமையில் உயர்நிலை குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சதர்ன் திருமலைக்குமார், மாவட்ட துணை செயலாளர் பசீர் அகமது, எல்.ஐ.சி. ராஜ்குமார், நகர் பொறுப்பாளர் பழ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பிச்சைமணி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க.-தி.மு.க.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி, அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, அவை தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் சதன் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வின்சென்ட்ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சுரேஷ், ரஜினிகாந்த், நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், குப்புச்சாமி, முத்தையா, முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ், போகலூர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, நகர் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முத்துப்பாண்டி, வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆதில் அமீன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் காசிநாதன், பெரியார் நகர் அழகிரி, அசாருதீன், பாலசுப்பிரமணியன், கபார்கான், சேகர், லட்சுமணன், கஜேந்திரன், முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல், நகர் செயலாளர் சேதுகருணாநிதி, நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், சக்தி, பூபதிமணி, முன்னாள் இளைஞரணி செயலாளர் செல்வம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குமரகுரு, வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் மஞ்சூர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி சேதுபதி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மள்ளர் கழகம் சார்பில் பொது செயலாளர் சுரேஷ் தலைமையில் பொருளாளர் அழகர், மாவட்ட செயலாளர்கள் மதுரை ராஜ்குமார், மாநில நிர்வாகிகள் டாக்டர் சேவியர், சுரேஷ், மாடசாமி, அழகர், நெல்லை பாலா, தேனி ஆனந்த், விருதுநகர் மாடசாமி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். த.மா.கா. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.பி. ராம்பாபு, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ரபீக் அகமது, நகர் தலைவர் கோதண்டராமன், வட்டார தலைவர் ஜெயராஜ் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் முருகநாதன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் ஓவியர் சரவணன், பத்மாவதி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேலன், பரமக்குடி நகர் செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய செயலாளர் சந்திரபிரசாத், நகர் பொருளாளர் நவநீதகிருஷ்ணன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மகளிரணி ஒன்றிய செயலாளர் ராணி, ஒன்றிய துணை செயலாளர் செல்வம், இளைஞரணி செயலாளர் உதயா மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெற்றிக்குமரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழர் மாமன்றம் சார்பில் அதன் நிறுவன தலைவரும், முன்னாள் நகரசபை கவுன்சிலருமான மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் காளிதாஸ், முருகேசன், தேவேந்திரகுல இளைஞர் பேரவை வேல்முருகன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமர், முருகன், குமார், கதிர், விடுதலை சேகரன், மோகன் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கமுதி வெள்ளையாபுரம் கிராமத்தின் சார்பில் தளபதி ராஜ்குமார் தலைமையில் சிவகுருநாதன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மருதநிலம் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தியாகி இமானுவேல் சேகரன் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர் சந்திரபோசு மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேவேந்திரர் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மாரிமுத்து தலைமையில் செயலாளர் எல்.ஐ.சி. ராஜ்குமார், பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துணை பொது செயலாளர்கள் கலைவேந்தன், கனிஅமுதன், மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, துணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன், நகர் செயலாளர் சரவணன், செய்தி தொடர்பாளர் முதுவை மீரா உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார், மாநில துணை தலைவர் அறிவழகன், மாவட்ட செயலாளர்கள் தங்கராசு, ஹக்கீம், துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன் ராஜமூர்த்தி, நகர் செயலாளர் பாலகிருஷ்ணன், தொழிற்சங்க செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய-மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில அமைப்பாளர் கருப்பையா தலைமையில் அமைப்பாளர் ராமநாதன், தலைவர் கர்ணன், செயலாளர் சேக்கிழார், பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேலு, மற்றும் நிர்வாகிகள் ராமையா, ரவி, முருகன், கருப்பையா, ரவீந்திரன், காளிதாஸ், விஜயகுமார், பாண்டியராசு, ராமர் வேலு, முருகவேல், அழகு குமார், சுரேஷ், ராமர், செந்தூர் முருகன், வீரக்குமார், தர்மராஜ், கணேசன், ராஜ்குமார், செல்வக்குமார், சோமசுந்தரம், பாலமுருகன், மாதவன் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.க்கள் செல்வப்பெருந்தகை, விசுவநாதன், மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி, மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் தலைவர் அப்துல் அஜீஸ், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஆலம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கிறிஸ்டோபர் திலக், வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் பொன்.பாலகணபதி, எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் மாநில துணை தலைவர் முருகன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜ், அமைப்பு செயலாளர் குமார், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கண்ணன், வர்த்தக அணி நாகராஜன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஒருங்கிணைந்த வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் வேலுச்சாமி தலைமையில் செயலாளர் ஆப்ரகாம், பொருளாளர் ஹரிதாஸ், துணை தலைவர்கள் பாரதி, சக்திவேல், துணை செயலாளர் முனியசாமி, கமிட்டியினர் முத்துமணி, ராமர், சதீஷ்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.ம.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையா, மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மாநில அம்மா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதமிழன், அமைப்பு செயலாளர்கள் ஜி.முனியசாமி, சோமாத்தூர் சுப்பிரமணியன், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார், சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி, ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மணல் சந்திரசேகர், நகர் செயலாளர்கள் பரமக்குடி வேந்தை சுப்பிரமணி, கீழக்கரை சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் போகலூர் ராஜாராம் பாண்டியன், பரமக்குடி செந்தில்குமார், நயினார்கோவில் சிவக்குமார், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், பரமக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் இந்திரன், கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வம், ராமநாதபுரம் நகர் சிறுபான்மை பிரிவு செயலாளர் தமீம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜக்கையன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்ப்புலிகள் அமைப்பின் சார்பில் பொது செயலாளர் பேரறிவாளன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை சார்பில் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மயில்சாமி, செபஸ்டியான், புவனேஸ், ராஜ்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராம்நகர், பொன்னையாபுரம், இந்திராநகர், காந்திநகர், காட்டுப்பரமக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் இளைஞர்கள் ஜோதி எடுத்து வந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் முடிக்காணிக்கை செலுத்தினர்.
தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை சார்பில் அதன் தலைவர் ராமர் பாண்டி தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் நிர்வாகி சேது தலைமையில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஆதிதமிழர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கமுதி வெள்ளையாபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினவிழா தேவேந்திரர் இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் குருநாதன், ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார். விழாவையொட்டி அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story