மாவட்ட செய்திகள்

அமைதி பள்ளத்தாக்கு அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிப்பு + "||" + Destruction of cannabis plants near amaithi valley

அமைதி பள்ளத்தாக்கு அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிப்பு

அமைதி பள்ளத்தாக்கு அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் அழிப்பு
அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

கொழிஞ்சாம்பாறை,

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி உதவி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்தாஸ். இவருடைய தலைமையில் ஏராளமான போலீசார் நேற்று அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அமைதி பள்ளத்தாக்கில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சகமலை அடிவாரத்தை அடைந்தனர்.

இந்த மலையடிவாரத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சுமார் ஒரு ஏக்கரில் இந்த செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கஞ்சா செடிகள் வெட்டி தீ வைத்து அழித்தனர்.

6 மாத வளர்ச்சியில் இருந்த 820 செடிகளும் தீ வைத்து அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இந்த செடிகளை வளர்த்தது யார்? என்று தெரியவில்லை. எனவே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்த இடம் யாருக்கு சொந்தமானது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு சாயப்பட்டறையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
ஈரோடு சாயப்பட்டறையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
2. கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வழியில்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
4. தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம்
கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கியதில் தொழிலாளியின் வீடு சேதம் அடைந்தது.