மாவட்ட செய்திகள்

பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், போலீசார் பாராட்டு + "||" + The girl missed Auto driver handed over Rs 80 thousand, The appreciation of the police

பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், போலீசார் பாராட்டு

பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர், போலீசார் பாராட்டு
சமயநல்லூர் அருகே பெண் தவறவிட்ட ரூ.80 ஆயிரத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

வாடிப்பட்டி,

சமயநல்லூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் செல்லத்துரை (வயது49).ஆட்டோடிரைவர். இவர் சமயநல்லூர் பஸ்நிறுத்தம் முன்பு உள்ள ஆட்டோ நிலையத்தில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் பரவைக்கு சவாரி சென்று கொண்டிருந்தபோது ஊர்மெச்சிகுளம் பஸ்நிறுத்த பகுதியில் ஒரு பெண் மொபட்டில் ஆட்டோவிற்கு முன்னால் சென்றார்.

அப்போது அங்குள்ள வேகத்தடையில் அவர் ஏறி இறங்கியபோது பை மொபட்டில் இருந்து தவறிவிழுந்தது அதை கவனிக்காமல் அந்த பெண் சென்றுவிட்டார். பின்னால் ஆட்டோவில் சென்ற செல்லதுரை அதை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.500 தாள்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். அதன்பின் பரவையில் சவாரியை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பணத்தை தவறவிட்ட அதேபெண் அதை தேடி திரும்பி வந்துகொண்டிருந்தார். உடனே செல்லத்துரை அவரிடம் சென்று விசாரித்தபோது வைகைநகரை சேர்ந்த ஜுவானந்தம் மனைவி விமலாராணி(40) என்றும் தனது பணத்தை தவறவிட்டுவிட்டதாககூறினார். உடனே அந்தபணம் என்னிடம் உள்ளது. போலீஸ்நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறேன் என்று செல்லத்துரை கூறினார். அதன்பின் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் விமலாராணியிடம் அந்த பணப்பையை செல்லதுரை ஒப்படைத்தார். அவருடைய நேர்மையை பாராட்டி போலீசார் வாழ்த்துதெரிவித்தனர்.