மாவட்ட செய்திகள்

செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு + "||" + The nurse's house is 20 pounds jewelry theft

செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்பூர், 


ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரசா என்கிற சரஸ்வதி (வயது 55). இவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராதாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், பட்டு சேலைகள், வெள்ளி கிண்ணம் மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பாபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
மத்தூர் அருகே பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பழவியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டது.
3. பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை - பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில்
வாடகை காரில் சென்ற பயணியிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4. தாசில்தார் வீட்டில் நகை-பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தாசில்தார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கன்னியாகுமரியில் துணிகரம் : கிறிஸ்தவ ஆலயத்தில் 18 பவுன் நகை கொள்ளை - கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து மர்ம நபர் கைவரிசை
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 18 பவுன் நகைகள் கொள்ளை போயின. கோவிலின் உள்ளே பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-