மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்


மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட வெத்தியார்வெட்டு கிராமத்தில் மக்்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.

அரியலூர்,

முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் முதியோர் ஓய்வூதியத்தொகை மற்றும் இதர ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 908 மதிப்பில் வேளாண் உபகரணங்களும் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 908 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா நன்றி கூறினார்.

Next Story