உசிலம்பட்டியில் ஓட,ஓட விரட்டி தொழில் அதிபர் வெட்டிக்கொலை, தங்கையின் கணவர் கைது


உசிலம்பட்டியில் ஓட,ஓட விரட்டி தொழில் அதிபர் வெட்டிக்கொலை, தங்கையின் கணவர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2018 4:30 AM IST (Updated: 16 Sept 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் தொழில் அதிபர் ஓட,ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது மாமரத்துப்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன்(50). கோழிப்பண்ணை தொழில் அதிபர். இவரது தங்கை சாந்தாதேவியை சங்கரன்கோவிலைச்சேர்ந்த குருசாமி மகன் முருகையாவிற்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இவர் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.

முருகையாவிற்கும், சாந்தாதேவிக்கும் திருமணமாகி ஒரு வருடமாகிறது. சாந்தாதேவி முருகையாவிற்கு 2–வது மனைவி, இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வெல்லத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து ஊருக்கு திரும்பிய முருகையா தனது மனைவியை சேர்ந்து வாழ விடாமல் கெடுப்பது அறிவழகன்தான் என்று, உசிலம்பட்டி கீழப்புதூர் மதுரை சாலையில் அறிவழகனை ஓட,ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையாவை கைது செய்தனர்.


Next Story