மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா + "||" + In the district ADMK, DMK On behalf of Anna birthday party

மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

மாவட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சேலம்,

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏத்தாப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜ், சின்னதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ரமேஷ், ஏத்தாப்பூர் நகர செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்பாவு மற்றும் செல்வம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் விழா பனமரத்துப்பட்டியில் கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமாசங்கர், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாரப்பட்டி குமார், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பனமரத்துப்பட்டி நகர செயலாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

சேலம் புறநகர் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா அரியானூர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்றது. இதில் மன்ற செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.ரமேஷ், ஆர்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாரமங்கலத்தில் ஒன்றியம், நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது. ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன், பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜா, வெற்றிவேல், மனோன்மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதே போல தாரமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.கே.செல்வம் தலைமை தாங்கினார். சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.மாதேஸ்வரன், தர்மபுரி தேர்தல் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் ஒன்றிய செயலாளர் தங்கவேல், நகர செயலாளர் பிரபுவேல்பாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

தாரமங்கலத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் குப்பு என்கிற குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர்கள் செல்வராஜ், ராஜமாணிக்கம், வெங்கிட்டு உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்காடு ஒண்டிக்கடையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய இணை செயலாளர்கள் சின்னதம்பி, வெங்கடாசலம் உள்பட தி.மு.க.வினர் பலர் பங்கேற்றனர்.

பனமரத்துப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த விழாவில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமை தாங்கி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாதேஸ்வரன், சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் சண்முகம், நரசிங்கபுரம் முன்னாள் தலைவர் காட்டுராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டொபசிட் இழக்கும் - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
மக்களின் ஆதரவை இழந்துவிட்டதால் 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி என்று ராமநாதபுரத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார்.
2. சிங்கம்புணரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்; அமைச்சர் பாஸ்கரன், நடிகர் சிங்கமுத்து பங்கேற்பு
சிங்கம்புணரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், நடிகர் சிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
3. அ.தி.மு.க. மாபெரும் சக்தி, அதை யாராலும் வீழ்த்த முடியாது - அமைச்சர் உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க. மாபெரும் சக்தி, அதை யாராலும் வீழ்த்த முடியாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
4. தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என பரமக்குடியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தார்.
5. அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. சார்பில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டார்.