தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்


தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:00 PM GMT (Updated: 15 Sep 2018 8:29 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

கோவில்பட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில், 6 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பு பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி மெயின் ரோடு, புது ரோடு வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பின்னர் விநாயகர் சிலைகளை எட்டயபுரம், விளாத்திகுளம் வழியாக வேம்பாருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.

தென்மண்டல இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து, மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், மாவட்ட செயலாளர் வீரமுருகன், துணை தலைவர் சுடலைமணி, நகர தலைவர் தளவாய்ராஜ், செயலாளர் கார்த்திக், அமைப்பாளர் ராசுகுட்டி, பூசாரி பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கயத்தாறு

கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் 10 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில் முன்பு கொண்டு வந்தனர்.

பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விமான சாலை, வாரச்சந்தை ரோடு, கீழ பஜார், மெயின் ரோடு வழியாக கடம்பூர் சாலையை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.

ஒன்றிய தலைவர் ராமசாமி, பொதுச்செயலாளர் செல்லத்துரை, மாநில நிர்வாக குழு தலைவர் ராம குணசீலன், பூசாரி பேரவை தென் மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், பாரதீய கிசான் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் சேசு நாயக்கர், துணை தலைவர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தம் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உடன்குடி

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய யூனியன்களில் அகில பாரத இந்து மகா சபா சார்பில், 37 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு கொண்டு வந்தனர்.

மதியம் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மாநில செயலாளர் அய்யப்பன் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் சிறிய விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வில்லிகுடியிருப்பு சந்திப்பு வரையிலும் வந்தனர். பின்னர் அவர்கள், வாகனங்களில் உள்ள பெரிய விநாயகர் சிலைகளுடன் சிறிய விநாயகர் சிலைகளையும் வைத்து விஜர்சனத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளையும் குலசேகரன்பட்டினத்துக்கு கொண்டு சென்று, கடலில் விஜர்சனம் செய்தனர்.

ஒன்றிய பொதுச்செயலாளர் உதயகுமார், மாவட்ட துணை தலைவர்கள் ராமர், மோகன், ரவிகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில துணை தலைவர் மணிகண்டன், நகர தலைவர் ஹரி, ஒன்றிய தலைவர் பாலையா, மகராஜன், அந்தோணி, இசக்கிமுத்து, பாரதீய வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தீபு (திருச்செந்தூர்), பாலச்சந்திரன் (சாத்தான்குளம்) தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story