விராரில் புதருக்குள் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்


விராரில் புதருக்குள் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2018 5:00 AM IST (Updated: 16 Sept 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

விராரில் புதருக்குள் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர். அந்த குழந்தை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது.

வசாய், 

விராரில் புதருக்குள் வீசப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர். அந்த குழந்தை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது.

புதருக்குள் குழந்தை

பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் அங்குள்ள நானா நானி பார்க் பகுதியில் கபடி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது, புதருக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி விரார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை பத்திரமாக வெளியே மீட்டனர்.

மூச்சு விடுவதில் சிரமம்

அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆகி இருந்தது தெரியவந்தது. அதன் தலையின் பின் பகுதி மற்றும் உதட்டில் காயம் இருந்தது. உடனடியாக போலீசார் குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின் றனர்.

இந்தநிலையில், பிறந்த குழந்தையை புதரில் வீசியவர்களை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமரா காட்சியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்ற னர்.

Next Story