அருண் ஜெட்லியுடன் விஜய் மல்லையா சந்திப்பு விவகாரம் இத்தனை நாட்களாக காங்கிரஸ் மவுனம் காத்தது ஏன்?


அருண் ஜெட்லியுடன் விஜய் மல்லையா சந்திப்பு விவகாரம் இத்தனை நாட்களாக காங்கிரஸ் மவுனம் காத்தது ஏன்?
x
தினத்தந்தி 15 Sep 2018 10:30 PM GMT (Updated: 15 Sep 2018 8:58 PM GMT)

நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் விஜய் மல்லையா சந்திப்பு ஏற்கனவே தெரிந்திருந்தும் இ்த்தனை நாட்கள் காங்கிரஸ் மவுனம் காத்தது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் விஜய் மல்லையா சந்திப்பு ஏற்கனவே தெரிந்திருந்தும் இ்த்தனை நாட்கள் காங்கிரஸ் மவுனம் காத்தது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

விஜய் மல்லையா தகவல்

வங்கிகளில் பலகோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லண்டன் தப்பி வரும் முன் நிதி மந்திரி அருண் ெஜட்லியை சந்தித்ததாக பரபரப்பு தகவலை சமீபத்தில் தெரிவித்தார்.

இதனை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதி மந்திரி அருண் ஜெட்லியையும், பா.ஜனதாவையும் கடுமையாக சாடி வருகின்றன.

ஆனால் பா.ஜனதாவை எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்யும் சிவசேனா இந்த பிரச்சினையில் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

அபத்தமானது

தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒரு ஏமாற்றுக்காரர். அவர் வெளிநாட்டுக்கு தப்புவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியுள்ளார்.

ஆனால் விஜய் மல்லையா கூறியதை வைத்துக்கொண்டு அருண் ஜெட்லியை குற்றவாளி ஆக்குவதற்கான தேவை என்ன வந்தது? ஆனால் காங்கிரஸ் அதை செய்கிறது. அருண் ஜெட்லியை அவர் குற்றவாளி என கூறுவது அபத்தமானது.

உண்மையில் சொல்லவேண் டும் என்றால் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் மந்திரிகள் யாரை சந்திக்கிறார்கள், யாரை சந்திப்பதை தவிர்க்கிறார்கள் என்பது அங்குள்ள அனைவருக் கும் வெளிப்படையாக தெரியும். அதுமட்டும் இல்லாமல் விஜய் மல்லையா ஒருவர் மட்டுமே கடன் செலுத்தாமல் ஏமாற்றியவர் இல்லை. இவரை போலவே மேலும் பல கடன் மோசடிக்காரர்கள் எம்.பி.க்கள் கண் முன்பு வெளிப்படையாக சுற்றித்திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தேர்தலின் பகுதி

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி நிரவ் மோடியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்காக அவர் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு ராகுல்காந்தி தான் காரணம் என்று கூறி அவரை குற்றம் கூற முடியுமா?

காங்கிரஸ் கட்சிக்கு அருண்ஜெட்லியுடனான அவரது சந்திப்பு குறித்து ஏற்கனவே தெரிந்திருந்த போதும் அதை இத்தனை நாட்கள் வெளியே கூறாமல் மவுனமாக இருந்தது ஏன்?. இது அனைத்தும் 2019-ம் ஆண்டு தேர்தலின் ஒரு பகுதியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story