பட்டாசு கடை நடத்திட 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட கலெக்டர்கள் தகவல்
பட்டாசு கடை நடத்திட 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நடத்திட உத்தேசித்துள்ள வியாபாரிகள் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகள் 2008-ன் படி படிவம் எஇ-5ல் கடை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் 2 புகைப்படங்களுடன் உரிய அனுமதி கட்டணம் அரசு கணக்கில் செலுத்தி வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story