பேரணாம்பட்டு பகுதியில் 4 விநாயகர் சிலைகள் திருட்டு போலீசில் புகார்
பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விநாயகர் சிலைகள் திருடப்பட்டது.
பேரணாம்பட்டு,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திரு.வி.க. நகர், ஓம்சக்தி கோவில், அம்பேத்கர் சிலை, வி.கோட்டா ரோட்டில் உள்ள பக்காலபல்லி ஆகிய 4 இடங்களில் 3 அடி முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story