பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2018 11:30 PM GMT (Updated: 15 Sep 2018 11:30 PM GMT)

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், அவருடைய படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

நெல்லை, 

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், அவருடைய படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்தநாள் 

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெலலை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்திமுருகேசன், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட முன்னாள் செயலாளர் அரிகரசிவசங்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் காபிரியேல் ஜெபராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இ.நடராஜன், புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டிபாண்டியன், கண்டியபேரி ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளர் கல்லூர்வேலாயுதம் தலைமையில் அந்த கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. 

தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட அவைத்தலைவர் சுப.சீத்தாராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ம.தி.மு.க.வினர் தொழிற்சங்க செயலாளர் நடராஜன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராதாபுரம் 

ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சமூகை முரளி, ராதாபுரம் ஊராட்சி கழக செயலாளர் கோவிந்தன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தனபால், முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய பொருளாளர் கல்கண்டு, மாவட்ட பிரதிநிதி ராஜன், திசையன்விளை முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், பாலசுப்பிரமணியன், மகேசுவரன், கூடங்குளம் ஊராட்சி கழக செயலாளர் துரை, கூடங்குளம் சுபாஷ், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் செழியன், ஒன்றிய பிரதிநிதி நசுருதீன், அகஸ்டின், திசையன்விளை நகர செயலாளர் டிம்பர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாசுதேவநல்லூர் 

வாசுதேவநல்லூர் அருகே உள்ள தாருகாபுரம் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கல்லூரி நிறுவனர் ராமையா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், நகர நிர்வாகி சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை 

செங்கோட்டை காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர் எஸ்.எம்.ரகீம் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்சங்க செயலாளர் வழக்கறிஞர் மு.ஆபத்துகாத்தான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் ஜெபராஜ் நன்றி கூறினார்.

அம்பை 

அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா படத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், அம்பை எம்.எல்.ஏ.வுமான முருகையா பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய சொயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் அறிவழகன், சங்கரநாராயணன், இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story