பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவி சாவு


பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட மாணவி சாவு
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி இறந்தார்.

பவானிசாகர்,

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகள் தர்‌ஷனா(வயது 12). இவள் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு ஆனந்தராஜ், கவிதா, தர்‌ஷனா ஆகிய 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தர்‌ஷனாவின் கால் எதிர்பாராதவிதமாக அருகே வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியின் பின்புறம் பட்டது. இதில் அவளை மின்சாரம் தாக்கியது. இதில் தர்‌ஷனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்‌ஷனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story