அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டது
மெலட்டூரில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் நெல் விற்பனைக்காக விவசாயிகள் வார கணக்கில் காத்திருக்கிறார்கள்.
மெலட்டூர்,
தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. பாபநாசம் அதன்சுற்று பகுதிகளில் குறுவை முன்பருவநெல் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அரசு நேரடி நெல்கொள்முதல்் நிலையங்களில் விற்பனை செய்ய எடுத்து செல்கின்றனர். அங்கு சாக்கு தட்டுபாடு காரணமாக நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
இதனால் விவசாயிகள் தங்கள் அவசர தேவைக்காக தனியார் வியாபாரிகளிடம் மூட்டைக்கு ரூ.100 வரை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள்அரசு நெல்கொள்முதல் நிலையங்களையே நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் தற்போது மெலட்டூரில் செயல்பட்டு வந்ந அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டது. இதனால் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர். மேலும் நெல்லை கொட்டி வைத்தும் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “மெலட்டூர், நரியனூர் காட்டுகுறிச்சி, நரசிங்கமங்களம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, மேலசெம்மங்குடி நாகலூர் ஆகிய பகுதிகளில் மின் மோட்டார் உதவியுடன் பயிர் செய்யப்பட்டிருந்த குறுவை முன் பருவ நெல்பயிர் அறுவடை செய்யும் பணி தற்போதுமும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல்கொள்முதல்் நிலையங்களில் விற்பனைக்கு எடுத்து சென்றால் அங்கு சாக்கு இல்லாததால் கொள்முதல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கொள்முதல் நிலையமும் மூடப்பட்டுள்ளதால், நெல் மூட்டைகளுடனும், நெல்லை குவியலாக கொட்டி வைத்தும் வார கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. வெளிமார்க்கெட்டில் விற்றால் குறைந்த விலை காரணமாக நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு வருகிற 30-ந்தேதி வரை கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவித்திருந்தும் மெலட்டூர் கொள் முதல் நிலையத்தை மூடிவிட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்”என்ற னர்.
Related Tags :
Next Story