கூடுதல் வரதட்சணை கேட்டதால் திருமணம் நின்றது:சர்வேயர் உள்பட 6 பேர் மீது வழக்கு


கூடுதல் வரதட்சணை கேட்டதால் திருமணம் நின்றது:சர்வேயர் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sep 2018 10:15 PM GMT (Updated: 16 Sep 2018 8:39 PM GMT)

கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணம் நின்றதால் சர்வேயர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் குமரேசன்(வயது 49). இவரது மகளுக்கும், திருப்பாலை பகுதியை சேர்ந்த சர்வேயர் நாகராஜ் என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 12–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்தநிலையில் மணமகன் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளனர். இதனால் திருமணம் நின்றது. இதுபற்றி பெண்ணின் தந்தை குமரேசன், மதுரை அனைத்து மகளில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சர்வயேர் நாகராஜ், அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story