வேலூரில் அதிகபட்சமாக 32.8 மில்லி மீட்டர் மழை பதிவு
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மிதமான மழை பெய்தது. வேலூரில் அதிகபட்சமாக 32.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பகல் வேளையில் கோடைகாலத்தை போன்று சுட்டெரித்து வருகிறது. மாலை, இரவு நேரங்களில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்கிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயில், இரவு வேளையில் மழை என 2 விதமான காலநிலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 95 டிகிரி வெயில் பதிவானது. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமான மழை விடிய, விடிய பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வேலூர் புதிய பஸ் நிலையம், நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளம்போன்று மழை நீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் மிதமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூரில் 32.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மேல்ஆலத்தூர் - 28.6, ஆலங்காயம் -23.6, குடியாத்தம் -21, ஆம்பூர் -20.8, காவேரிப்பாக்கம் -19.8, திருப்பத்தூர் -19.6, சோளிங்கர் -14, வாலாஜா -10, ஆற்காடு மற்றும் அரக்கோணம் -8.2, வாணியம்பாடி -5.4.

Related Tags :
Next Story