திருமணத்துக்கு மறுத்த பெண்ணை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு


திருமணத்துக்கு மறுத்த பெண்ணை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 10:59 PM GMT)

திருமணத்துக்கு மறுத்த பெண்ணை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை, 

திருமணத்துக்கு மறுத்த பெண்ணை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருமணத்துக்கு மறுப்பு

மும்பை காலாசவுக்கியை சேர்ந்த விவாகரத்தான 31 வயது பெண் ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலமாக மறுமணத்திற்கு வரன் தேடிவந்தார். இவருக்கு கடந்த ஆண்டு ரவி(34) என்பவர் அறிமுகம் ஆனார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்தநிலையில் ரவியின் குணநலன்கள் பிடிக்காததால், அந்த பெண் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரவி பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தார்.

மேலும் பெண்ணின் அலுவலகத்திற்கு போன் செய்தும் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அந்த பெண் காலாசவுக்கி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு டெலிபோன் ஒன்று வந்தது. அப்போது, எதிர்முனையில் பேசிய நபர், சம்பந்தப்பட்ட பெண்ணின் தம்பி மும்பையில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட் டார்.

இதுகுறித்து போலீசார் விவாகரத்தான பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண் தன்னை பழிவாங்க ரவி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கலாம் என போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணத்துக்கு மறுத்ததால் விவாகரத்தான பெண்ணை பழிவாங்க ரவி தான் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story