தினந்தோறும் விலை அதிகரிப்பு பெட்ரோல் ஒரு லிட்டர் 90 ரூபாயை நெருங்கியது டீசல் ரூ.78.26-க்கு விற்பனை
தினந்தோறும் விலை அதிகரிப்பால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 90 ரூபாயை நெருங்கியது. டீசல் ரூ.78.26-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மும்பை,
தினந்தோறும் விலை அதிகரிப்பால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 90 ரூபாயை நெருங்கியது. டீசல் ரூ.78.26-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தினமும் உயர்வு
சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதன் விளைவு பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத வகையில் சென்றுகொண்டு இருக்கிறது.
இதனால் தினந்தோறும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
90 ரூபாயை நெருங்கியது
அதன்படி நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 28 காசும், டீசல் 20 காசும் விலை அதிகரித்தது. இதன் மூலம் மும்பையில் பெட்ரோல் விலை 89 ரூபாயை கடந்து, ஒரு லிட்டர் 89 ரூபாய் 29 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் 78 ரூபாய் 26 காசுக்கு விற்பனை ஆனது.
இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story