ஸ்ரீவில்லிபுத்தூரில் எச்.ராஜாவை கண்டித்து கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
இந்து சமய அறநிலையத் துறைப் பணியாளர்களை. தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எச்.ராஜா அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு கோயில் பணியாளர்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
எச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சில நாட்களுக்கு முன்னர் இந்து சமய அறிநிலையத் துறை பணியாளர்களை அவதூறாகப் பேசினாராம். இதனைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், பெரியமாரியம்மன் கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story