பாலக்கோடு பேரூராட்சி: ரூ.2.20 லட்சம் மதிப்பில் மின்விசை குடிநீர் தொட்டி திறப்பு


பாலக்கோடு பேரூராட்சி: ரூ.2.20 லட்சம் மதிப்பில் மின்விசை குடிநீர் தொட்டி திறப்பு
x
தினத்தந்தி 19 Sept 2018 4:45 AM IST (Updated: 19 Sept 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ.2.20 லட்சம் மதிப்பில் மின்விசை குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 2-வது வார்டு மைதீன் நகரில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பில் சிறுமின்விசை மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story