காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 1,389 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் உண்டியல் வருமானம், கோவில் நிலங்கள், கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் சுகாதாரம் வரவு- செலவு விவரங்கள், நிலங்கள் பராமரிப்பு, பக்தர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்ட கோவில்களில் எப்போது வேண்டுமானாலும் நீதிபதிகள் ஆய்வு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையிலான நீதிபதிகள் குழு காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட நீதிபதி கருணாநிதி, குற்றவியல் நீதிபதி மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிகிருஷ்ணாஆனந்தன் ஆகியோர் இருந்தனர்.
அடுத்து வரும் நாட்களில் காமாட்சியம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில்களில் ஆய்வு நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்த மாவட்ட நீதிபதிகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, வரதராஜபெருமாள் கோவில் நிர்வாக அதிகாரி தியாகராஜன், கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் குமரன், முன்னாள் மேலாளர் சீனிவாசன், கோவில் மணியக்காரர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story