அரசு விடுதிக்கு தண்ணீர் எடுத்து வர மாணவிகளிடம் வற்புறுத்தல் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


அரசு விடுதிக்கு தண்ணீர் எடுத்து வர மாணவிகளிடம் வற்புறுத்தல் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sep 2018 11:15 PM GMT (Updated: 19 Sep 2018 9:31 PM GMT)

காரிமங்கலம் அரசு விடுதிக்கு தண்ணீர் எடுத்து வர மாணவிகளிடம் வற்புறுத்துவதின் பேரில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்்கி அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பழமையான இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் தவிக்கிறார்கள். குறிப்பாக கட்டிடத்தின் சிமெண்டு மேற்கூரைகள் பெயர்ந்து எப்போது விழுமோ? என்ற நிலையில் உள்ளது. மாணவிகளுக்கான குளியல் அறை, கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது.

இந்தநிலையில் இந்த மாணவிகளை விடுதி முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டியிலிருந்து விடுதியில் உள்ள கழிப்பறைகளுக்கும், சமையல் செய்வதற்கும் குடங்களில் தண்ணீர் எடுத்து வர ஊழியர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் தண்ணீர் எடுத்து குடங்களில் சுமந்து செல்கிறார்கள். ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த மாணவிகளை குடங்களில் தண்ணீர் எடுத்து வர வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story