கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு


கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:00 PM GMT (Updated: 19 Sep 2018 10:52 PM GMT)

மதுராந்தகம் அருகே உள்ள குருகுலம் கிராமத்தில் கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்

மதுராந்தகம்,

மதுராந்தகம் அருகே உள்ள குருகுலம் கிராமத்தில் நுகர் பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான திறந்து வெளி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் இங்கு வைக்கப்பட்டு தார்பாய் போட்டு மூடி வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் தார்பாய் காற்றில் அடித்து செல்லப்பட்டு அங்கு வைத்திருந்த 100–க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:–

நெல் வாங்கும் போது ஈரப்பதம் இருந்தால் அதை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story